உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆடி 1ல் தேங்காய் சுடும் பண்டிகை குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டம்

ஆடி 1ல் தேங்காய் சுடும் பண்டிகை குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டம்

நாமக்கல்: ஆடி முதல் நாளான, நேற்று மாவட்டம் முழுதும், தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தில், மேற்கு மாவட்டங்களில் ஆண்டுதோறும், ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்-டாடப்படுவது வழக்கம். அதன்படி, வெண்ணந்துார் பகுதியில், நேற்று மாலை, பொதுமக்கள், சிறுவர், சிறுமியர், புதுமண தம்ப-தியர், இளம் தேங்காயில் அவல், பொட்டு கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி, தேங்-காயின் ஒரு கண்ணில் அழிஞ்சி குச்சியை சொருகி, மழையில் நனைந்தவாறு தீயில் வாட்டி தேங்காயை சுட்டனர்.அவ்வாறு சுடப்பட்ட தேங்காய்களை, அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, தீயில் சுட்ட தேங்காயை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தும், குடும்பத்துடன் உண்டும் புதுமண தம்பதிகள் தலை-யாடி பண்டிகையை கொண்டாடினர்.இதேபோல், ராசிபுரம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், மல்-லசமுத்திரம், திருச்செங்கோடு, எருமப்பட்டி, சேந்தமங்கலம் உள்-ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேங்காய் சுடும் பண்-டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை