உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி பிரச்னையில் விரைவில் ஒருமித்த கருத்து: தேவகவுடா

காவிரி பிரச்னையில் விரைவில் ஒருமித்த கருத்து: தேவகவுடா

திருச்சி : “காவிரி பிரச்னை குறித்து, தமிழக ஆட்சியாளர்களுக்கு முழுமையாக தெரியும். விரைவில் ஒருமித்த கருத்து ஏற்படும்,” என, முன்னாள் பிரதமர் தேவகவுடா, 91, கூறினார்.பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த தேவகவுடா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் பெரிய பெருமாள், தாயார் சன்னிதிகளுக்கு பேட்டரி காரில் சென்று, நேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு மரியாதை செய்து, பெருமாள் சந்தன அபயஹஸ்தம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:நான்கு ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும், மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக, நாணயம் வெளியிட்டது குறித்து, எந்தவித கருத்தும் சொல்ல விரும்பவில்லை.தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களுக்கும், இதற்கு முன் ஆட்சி செய்தவர்களுக்கும் காவிரி பிரச்னை குறித்து முழுமையான விபரங்கள் தெரியும். பெங்களூருவில் வசிக்கும், 1.40 கோடி பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்; இது, அனைவரும் அறிந்த செய்தி தான்.தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கும் இது தெரியும். இதற்கு மேல், இது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. பெங்களூரு உள்ளிட்ட ஒன்பது மாவட்ட மக்கள், குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.காவிரி பிரச்னை குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும்; அந்த நாள் விரைவில் வரும். அன்று இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.பின், ஸ்ரீரங்கம் - மேலுார் சாலையில் உள்ள பவுண்டரீகபுரம் மடத்திற்கு சென்று, ஜீயரிடம் ஆசி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Svs Yaadum oore
ஆக 23, 2024 08:45

டெல்லி இத்தாலி கும்பல் இந்த பிரச்னையில் தலையிட்டு தமிழ் நாட்டுக்கு ஆதரவாக கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ....இதில் சமூக நீதி மத சார்பின்மையாக திராவிட அக்கா தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ...


VENKATASUBRAMANIAN
ஆக 23, 2024 08:32

இப்போது வந்த நீரை என்ன செய்தார்கள். அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் 300 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டு விட்டு ஊளையிடுவது சரியா. இரண்டு மாநிலங்களிலும் அரசியல் செய்கிறார்கள். பாஜக ஆட்சியில் இருந்தவரை தண்ணீரானது கிடைத்தது. இப்போது முடியாது என்கிறார்கள். அரசியல்வாதிகள் ஒதுங்கி கொண்டு விவசாயிகள் உட்கார்ந்து பேசினால் பிரச்சினை தீரும். ஆனால் இரண்டு மாநில கட்சிகளும் தீர விடமாட்டார்கள். ஓட்டு அரசியல் செய்வார்கள். இதுதான் 70 ஆண்டுகளாக நடக்கிறது.


கதிர்வாணன்
ஆக 23, 2024 08:09

டம்மி பீசெல்லாம் ஸ்ரீரங்கம் வர்ரேன்னுட்டு ஊரையே அடிச்சு முடக்கி உள்ளூர் மக்களை ஸ்தம்பிக்க வெச்சுட்டாங்களாம். ஒரு நண்பர் அலுத்துக்கிட்டாரு. இங்கே வந்து, சீக்கிரம் காவிரி பிரச்சனைக்கு தீர்வுன்னு அடிச்சு உடும்


Kasimani Baskaran
ஆக 23, 2024 05:45

ஆற்று நீர் அனைவருக்கும் சொந்தம். ஆனால் அதை தேக்கி வைத்துக்கொண்டு விவசாயத்துக்கு தண்ணீர் விடமாட்டேன் என்று அடம் பிடிப்பது அக்கிரமம்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி