உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராகவேந்திரா மடத்து பீடாதிபதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம்

ராகவேந்திரா மடத்து பீடாதிபதி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம்

நாமக்கல்:மந்த்ராலயம் ராகவேந்திரா மடத்து பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமிகள், நாமக்கல் நரசிம்மர், நாமகிரி தாயார் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.ஈரோட்டில் நடந்த கும்பாபிஷேக விழாவில், மந்த்ராலயம் ராகவேந்திரா மட பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமிகள் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் மாலை, நாமக்கல் நாமகிரி தாயார் கோவிலுக்கு சென்றார்.பட்டாச்சாரியார்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதைத் தொடர்ந்து, நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்களில் வழிபாடு செய்தார்.அவர் கூறுகையில், ''நம் நாட்டுக்கும், இந்த தேசத்துக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றால், ராகவேந்திரா சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்,'' என்றார்.ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளையராஜா, ஜோதிடர் ஷெல்வீ உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி