உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 590 ஏக்கரில் கோடை சாகுபடி திட்டத்திற்கு விதைகள் வினியோகம்

590 ஏக்கரில் கோடை சாகுபடி திட்டத்திற்கு விதைகள் வினியோகம்

சேந்தமங்கலம்;சேந்தமங்கலம் யூனியனில், 590 ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதா, விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள உதவி இயக்குநர் மலர்கொடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சேந்தமங்கலம் யூனியனில், நீர் வசதி உள்ள விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் தேவை குறைவாக உள்ள பயிர்களான சோளம், உளுந்து, எள், நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டு, குறைந்த காலத்தில் வருமானம் பெற ஏதுவாக, சேந்தமங்கலம் பகுதியில் கோடை சாகுபடி திட்டம் 590 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்திற்கு தேவையான விதைகள், விதை கிராம திட்டத்தின் கீழ் மானிய விலையில், சேந்தமங்கலம் வட்டார வள மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இத் திட்டத்திற்கு தேவையான உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் பூஞ்சான் கொல்லிகளும், வட்டார வள மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை