உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

ப.வேலுார், ; ப.வேலுார் அரிமா சங்க சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம், நேற்று நடந்தது.இதில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்க-ளுக்கும் இலவசமாக பரிசோதனை முகாம் நடந்-தது. கண்புரை உள்ள, 162 நோயாளிகளுக்கு, இல-வசமாக அறுவை சிகிச்சை செய்ய, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். புற நோயாளியாக, 308 பேர் சிகிச்சை பெற்றனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கபிலர்மலை, பாண்டமங்கலம், பொத்தனுார், பர-மத்தி, வெங்கரை இடையாறு, ப.வேலுார் ஆகிய பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள், இலவசமாக சிகிச்சை பெற்றனர்.ப.வேலுார் அரிமா சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சாமிநாதன், தேவராஜ், பொருளாளர் அரசகுமார் கலந்து கொண்டனர். இலவச கண் சிகிச்சை முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், டாக்டர்கள் நெடுஞ்செழியன், கண்ணன் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !