உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்

ப.வேலுார்: ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில், பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில், 148வது இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான விழித்திறை பரிசோதனை முகாம், நேற்று நடந்தது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது கண்புரை உள்ள நோயாளிகள், 120 பேர் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். புற நோயாளியாக, 230 பேர் சிகிச்சை பெற்றனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த கபிலர்மலை, பாண்டமங்கலம் பொத்தனுார், பரமத்தி, ப.வேலுார், வெங்கரை நன்செய் இடையாறு ஆகிய பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்துகொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றனர். ப.வேலுார் அரிமா சங்க தலைவர் விஜய் கண்ணன், செயலாளர் சிவகுமார், லட்சுமணன், பொருளாளர் அருண்குமார் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ப.வேலுார் மேக்னா சில்க்ஸ் மற்றும் அரிமா சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ