உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம்: 31 மனுக்கள் ஏற்பு

கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம்: 31 மனுக்கள் ஏற்பு

நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைதீர் முகாமில், மொத்தம், 31 மனுக்கள் பெறப்பட்டன.நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு சங்கங்களின் பணியா-ளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் குறைதீர்க்கும் 'பணியாளர் நாள்' கூட்டம், நாமக்கல் மண்டல இணைப்பதி-வாளர் அலுவலகத்தில் நடந்தது. நாமக்கல் மண்டல இணைப்பதி-வாளர் அருளரசு தலைமை வகித்தார். சரக துணைப்பதிவாளர்கள், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.இக்குறைதீர் நாளில், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து-கொண்டு, தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம், 31 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக rcs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது.'பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். மனுதாரர்கள் தங்களது விண்ணப்பம் குறித்த நிலையை மேற்கண்ட இணையதள முகவ-ரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்' என, கூட்டுறவு துறை அதி-காரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ