உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அத்தனுாரில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் தொல்லை

அத்தனுாரில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் தொல்லை

வெண்ணந்துார், அத்தனுார் டவுன் பஞ்., பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சப்பட்டு செல்கின்றனர்.வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்.,ல் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்த டவுன் பஞ்., முறையான நடவடிக்கை எடுக்காததால், தற்போது நாய்கள் பெருக்கம் அதிகரித்து விட்டது. இந்த நாய்கள், கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையில் சுற்றி திரிவதால், டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது. குழந்தைகளை துரத்துவது, இறைச்சி கடை உள்ள பகுதியில், உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என, தொடர்ந்து நாய்கள், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.குறிப்பாக, டூவீலரில் செல்வோர் கீழே விழுந்து கை, கால் எலும்பு முறிவு மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம், தெரு நாய்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ