உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

பள்ளிப்பாளையம்: காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாசன விவ-சாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆக.,ல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதை பயன்படுத்தி சேலம், நாமக்கல் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுவர். பள்ளிப்பாளையம் சுற்று வட்டா-ரத்தில் மட்டும், இந்த வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து, வாய்க்காலில் தண்ணீர் திறப்பது வழக்கம்.கடந்த பிப்., முதல் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வந்-தது. இதனால் வாய்க்கால் பாசன விவசாயிகள் கவலையடைந்-தனர். தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்-ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரம், மேட்டூர் கிழக்கு-கரை பாசன வசதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து, வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி கதிர்-வேலு கூறியதாவது:தற்போது, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம-டைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வரு-கிறது. இதனால் நீர்மட்டம் மள, மளவென உயர வாய்ப்புள்-ளதால், இந்தாண்டு பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்-கவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை