கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கு: மா.செ., அழைப்பு
கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கு: மா.செ., அழைப்புநாமக்கல், செப். 8-நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.பி., ராஜேஸ்குமார் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம், வரும், 10 காலை, 10:30 மணிக்கு, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டல் திருமண மண்டபத்தில் நடக்கிறது. கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.பி., ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை வகிக்கிறார். அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைக்கிறார். மாநிலங்களவை குழுத்தலைவர், எம்.பி., திருச்சி சிவா, செய்தி தொடர்பு செயலாளர் இளங்கோவன் மற்றும் நகைச்சுவை பேரரசு பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.எனவே, அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.