ராசிபுரம்:சேலம் மறை மாவட்டத்துக்குட்பட்ட, மதியம்பட்டி சவுரிபாளையத்தில், புனித மரிய மதலேனாள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும், தேர்த்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும், மாலை, 6:30 மணிக்கு, நவநாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம், சங்ககிரி பங்கு தந்தை கிருபாகரன் தலைமையிலும், நேற்று, திருச்செங்கோடு பங்கு தந்தை எட்வர்டு ததேயுஸ் தலைமையிலும், நவநாள் திருப்பலி நடந்தது.இன்று மாலை, 6:30 மணிக்கு, பட்லுார் அருட்பணி விக்டர் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. நாளை காலை, 8:30 மணிக்கு, திருப்பலி, மதியம், 3:00 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை, 6:30 மணிக்கு, ஆசீர்வாத திருப்பலி, இரவு, 11:00 மணிக்கு வேண்டுதல் தேர் நடக்கிறது.வரும், 22 காலை, 5:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட புதிய குருக்கள் தலைமையில் திருப்பலியும், 7:15 மணிக்கு, சிலுவைப்பாதை நிலைகள் மந்திரிப்பு, 7:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில், திருவிழா திருப்பலி நடக்கிறது.மாலை, 5:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில், குணமளிக்கும் திருப்பலியும், நள்ளிரவு, 12:00 மணிக்கு, புனிதையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருள் புனிதர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். 23 காலை, 7:00 மணிக்கு, நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை கிளமெண்ட் ராஜ், பங்கு மக்கள் செய்துள்ளனர்.