உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலைக்கு எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு ‍செல்ல தடை

கொல்லிமலைக்கு எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு ‍செல்ல தடை

‍சேந்தமங்கலம், கொல்லிமலை வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து நடப்பதால், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டுச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள இந்த மலையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்தாண்டு கொல்லிமலையில் போதிய மழையில்லாததால், அருவிகளில் தண்ணீர் முற்றிலும் குறைந்தது.இதேபோல், கொல்லிமலைக்கு செல்லும் வனப்பகுதியில் உள்ள மூங்கில், சவுக்கு உள்ளிட்ட ஏராளமான மரங்கள் கடும் வெயிலால் காய்ந்துள்ளது. இதனால் அடிவார பகுதியான காரவள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏராளமான மரங்கள், செடிகள் தீப்பிடித்து எரிந்து வீணாகின. இதனால், கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை மற்றும் வனத்துறைக்கு செந்தமான பகுதிகளுக்கு செல்வோர் எளிதில் தீப்பிடிக்கும் தீப்பெட்டி, சிகரெட், மதுவகைகள் கொண்டு செல்ல வனத்துறையினர், நேற்று முதல் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து, கொல்லிமலை வனச்சரகர் சுகுமார் கூறியதாவது: கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் சமையல் செய்யவும், பிளாஸ்டிக் கொண்டு வரவும், புகை பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ