உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பொத்தனுாரில், சக்ரா நகர் நலச்சங்கம் சார்பில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ப.வேலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமை வகித்தர். சக்ரா நகரை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி பேசியதாவது: வெளியூர் செல்லும் குடும்பத்தினர் விலை உயர்ந்த பொருட்கள், பணத்தை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். வெளியூர், செல்லும்போது அருகில் உள்ளவர்களிடமும், போலீஸ் ஸ்டேஷனிலும் தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டின் முன், சிறு மின் விளக்கு இரவு நேரத்தில் எப்போதும் எரிய விட வேண்டும். வீட்டை உள்பக்கமாக வரும்படி பூட்டிச் செல்லவும். கோடைகாலம் என்பதால் இரவு நேரத்தில் வீட்டில் வெளியேவும், மாடியிலும் படுப்பதை தவிர்க்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை