மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மதிவதனி, 29. இவரது கணவர் அம்சமணி, 37. பெருந்துறை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை, 9:30 மணியளவில் அம்சமணி வேலைக்கு போக, குழந்தைகள் பள்ளிக்கு போக, மாமனார் சுப்பிரமணி, 65, மாமியார் செல்லம்மாள், 62, இருவரும் உறவினர் துக்க வீட்டிற்கு சென்றனர். மதிவதனி மாடு மேய்க்க சென்றார்.காலை, 11:00 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் போது, கிரில் கதவு, வீட்டின் கதவு திறந்த நிலையிலும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து துணி மணிகள் சிதறி கிடந்துள்ளது. கட்டில் அடிப்பகுதியில் வைத்திருந்த, 7 ¾ பவுன் தங்க தாலிக்கொடி, சுவாமி படத்தின் பின்புறம் வைத்திருந்த 8,000 ரூபாய் ரொக்கம், கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகியன திருடப்பட்டது தெரியவந்தது.இது குறித்து மதிவதனி புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
05-Oct-2025
05-Oct-2025