உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 2வது பேரவை கூட்டம்

இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 2வது பேரவை கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், இரண்டாவது சிறப்பு பொதுப்பேரவை கூட்டம், இன்று நடக்கிறது. அதற்கான அழைப்பிதழை, எம்.பி.,யும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார், கலெக்டர் உமாவிடம் வழங்-கினார்.கூட்டத்தில், சேலம், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்-கிக்கு கூட்டாக பாத்தியப்பட்ட அசையா சொத்துக்கள், முதலீடு செய்யப்பட்ட நீர்ம ஆதாரங்கள் ஆகியவற்றை உறுப்பினர் சங்கங்-களின் கணக்குகள் அடிப்படையில் பிரிவினை மேற்கொண்டு வழங்கப்படும் தொகைகள் குறித்த தீர்மானங்களை அங்கீகரிக்கப்-படுகிறது.இடைக்கால நிர்வாகக் குழு நியமனத்தை, 6 மாத காலத்திற்கு நீடித்தல், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் கிளை மற்றும் தலைமையக அலுவலக கட்டடம் கட்ட ஏதுவாக நில உரிமை மாற்றம் செய்து தரக்கோரி முன்மொழிவு சமர்ப்-பித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை