உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் ஓட்டி பழகிய போது பயங்கர விபத்து எதிரே வந்த காருடன் மோதி இரு சிறார் பலி

கார் ஓட்டி பழகிய போது பயங்கர விபத்து எதிரே வந்த காருடன் மோதி இரு சிறார் பலி

ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே குன்னத்துார் பெரியமருதுாரை சேர்ந்த ராமசாமி மகன் லோகேஷ், 17. இவரது தந்தைக்கு சொந்தமான, காரில், அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரமேஷ் மகன் சுதர்சனுக்கு, 14, டிரைவிங் பயிற்சி அளித்து வந்தார். இந்த முறைகேடான செயல், சில நாட்களாக, இரவில் நடந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு லோகேஷ், சுதர்சன் இருவரும், ஆம்னி காரை ஓட்டி பழகி கொண்டிருந்தனர். கபிலர்மலையில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில், கார் வேகமாக சென்று. அப்போது பரமத்திலிருந்து ஈரோடு நோக்கி எதிரே வந்த, கார் மீது மோதாமல் இருக்க, காரை ஒட்டிய சுதர்சன், பிரேக் போடுவதற்கு பதிலாக, மாற்றி ஆக்சிலேட்டரை மிதித்து விட்டார்.இதனால் அதிவேகத்தில் சென்ற கார், எதிரே வந்த சொகுசு கார் மீது, நேருக்கு நேராக மோதியது. இதில், காரில் இருந்த சுதர்சன், லோகேஷ் இருவரும் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். எதிரே காரை ஓட்டி வந்த கருக்கம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 26, படுகாயம் அடைந்து, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கார் ஓட்டி வந்த சுதர்சன், லோகேஷ் இருவரும் சிறுவர்கள். மேலும் காருக்கு பிப்.,20ம் தேதியுடன் இன்சூரன்ஸ் காலாவதியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தை, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் பார்வையிட்டனர்.பின், ஆய்வாளர் சரவணன் கூறுகையில்,''சிறுவர்களை காரை ஓட்டியதை கண்டும் காணாமல் இருந்த சுதர்சனின் தந்தை ரமேஷுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால், மோட்டார் வாகன விதிகளின்படி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் இருந்த கார் உரிமையாளர் ராமசாமிக்கும் அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 12, 2024 10:23

மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி முடித்த உடனே இருசக்கர புல்லட், அதைக் கையாளும் முன்னமே கார் நல்ல பிள்ளை வளர்ப்பு ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் எமனாக வளரும் இவர்களைப்பெற்றோர் மக்களை இழந்த அந்தப் பெற்றவர்களின் மாளாத துயரத்தை நினைத்துப் பார்ப்பார்களா? 17 வயதுப் பையன் 14 வயதுக்கு கற்றுத்தருகிறானா ? லட்சணம்தான்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 12, 2024 07:18

சிறுவர்கள் இப்போதெல்லாம் கட்டுக்கடங்காமல் போவது யாரால் ?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை