உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் மீது கார் மோதி பெண் படுகாயம்

டூவீலர் மீது கார் மோதி பெண் படுகாயம்

குமாரபாளையம், குமாரபாளையம் காந்தி நகர், பத்ரகிரியார் தெருவில் வசிப்பவர் காந்திமதி, 48, கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம், 2:15 மணியளவில் கவுரி தியேட்டர் அருகே, மளிகை கடையில் பொருட்கள் வாங்க, டி.வி.எஸ். எக்ஸல் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கனரா வங்கி ஏ.டி.எம். மையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த மாருதி எக்கோ வாகன ஓட்டுனர், இவர் வந்த டூவீலர் மீது மோதினார். இதில் காந்திமதி பலத்த காயமடைந்தார். குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையத்தை சேர்ந்த குணசேகரன், 42, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ