உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு தனி லைன் மூலம் 10 சிசிடிவிக்கள்

ஓட்டுப்பதிவு மிஷின் அறைக்கு தனி லைன் மூலம் 10 சிசிடிவிக்கள்

நாமக்கல்:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கண்காணிக்க, தனி லைன் மூலம் கூடுதலாக, 10, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.நாமக்கல் லோக்சபா தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில், கடந்த ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் அமைக்கப்பட்ட, 1,661 மையங்களில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, 'விவிபேட்' ஆகியவை, ஓட்டு எண்ணும் மையமான திருச்செங்கோடு, விவேகானந்தா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.இந்த மையத்தில், தலா மூன்று பேர் வீதம், கூடுதல் எஸ்.பி., - டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், 15 பேர், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் என, சுழற்சி முறையில், ஒரு சிப்ட்டிற்கு, 83 பேர் வீதம், மொத்தம், 249 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஓட்டு எண்ணும் மையம் அமைந்துள்ள கல்லுாரி முழுதும், 310, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, எல்.இ.டி., 'டிவி' மூலம், 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.இந்நிலையில், மேலும், 10 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 10 பாதுகாப்பு அறையில் வைத்து, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இந்த ரூமை நேரடியாக கண்காணிக்கும் வகையில், தனி லைன் மூலம், 10 'சிசிடிவி' கேமரா பொருத்துப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி