உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 10 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

10 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

நாமக்கல், தமிழகத்தில் வரும், 2026ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நேற்று தொடங்கியது. இந்நிலையில், தேர்தலை மையமாக கொண்டும், நிர்வாக காரணங்களுக்காகவும், மாவட்டத்தில், 10 போலீஸ் எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்து, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, பள்ளிப்பாளையம் மலர்விழி; வாழவந்திநாடு குமார்; சேந்தமங்கலம் பிரியா ஆகியோர், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல், நல்லுார் எஸ்.ஐ., சுப்ரமணியன், நல்லிபாளையத்திற்கும்; மல்லசமுத்திரம் ரஜினிகாந்த் பள்ளிப்பாளையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.மேலும், மோகனுாரில் பணியாற்றி வந்த எஸ்.ஐ., செல்லத்துரை, வெப்படை செந்தில்குமார் ஆகியோர் குமாரபாளையத்திற்கும், வேலகவுண்டம்பட்டி எஸ்.ஐ., பழனி, மல்லசமுத்திரத்திற்கும், எருமப்பட்டி தங்கவேல், நாமக்கல் சாந்தகுமார் ஆகியோர் ப.வேலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ