உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் /  ரத்த சோதனை ரிசல்ட்டுக்கு15 நாட்கள் காத்திருப்பு

 ரத்த சோதனை ரிசல்ட்டுக்கு15 நாட்கள் காத்திருப்பு

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அரசு தலைமை மருத்துவமனையில், நாள்தோறும், 300க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 80 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். தைராய்டு, புற்றுநோய் மற்றும் இதர சில ரத்த பரிசோதனைகளுக்கு ரத்த மாதிரி கொடுத்தால், அதன் ரிசல்ட் வர, 15 நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தனியார் மருத்துவமனையில், 2 மணி நேரத்தில், ரிசல்ட் கிடைக்கிறது. ஆனால், அதிக பணம் செலவாவதால், நோயாளிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். செவிலியர்கள் கூறுகையில், 'ப.வேலுார் அரசு மருத்துவமனையில், தைராய்டு ரத்த பரிசோதனை வசதி இல்லை. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, ரிசல்ட் ஆன்லைன் மூலம் 15 நாட்களில் வரும். அதன் பின், சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்கப்படும்' என்றனர். தலைமை டாக்டர் ஜெயந்தி,''தைராய்டு ரத்த பரிசோதனை ரிப்போர்ட், மூன்று நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை