உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசியலமைப்பு சாசன முன்னுரையை 1.50 லட்சம் பேர் இணைத்து சாதனை

அரசியலமைப்பு சாசன முன்னுரையை 1.50 லட்சம் பேர் இணைத்து சாதனை

நாமக்கல், ''மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என, 1.50 லட்சம் பேர் சேர்ந்து, அரசியல் அமைப்பு சாசன முன்னுரையை இணைத்து, உலக சாதனை படைத்துள்ளனர்,'' என, நாமக்கல் நல்லோர் வட்டத்தின், சுகாதாரம் மற்றும் முதலுதவி மாநில பொறுப்பாளர் ரேவதி கூறினார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: இந்தியா எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி உதித்த நாள் இன்று. சுதந்திர இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க, ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டிருந்த சட்டம் போதுமானதாக இல்லை. இதனால், இரண்டாண்டு, 11 மாதம், 18 நாள் கடின உழைப்பிற்கு பின், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1949 நவ., 26ல், ஏற்றுக்கொள்ளப்பட்டது.அரசியல் அமைப்பு சாசன நாளான இன்று(நேற்று) நல்லோர் வட்டம் என்ற தன்னார்வல இயக்கம் மூலம், கடந்த ஒரு வாரமாக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள், நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என, 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர், தாங்களாக முன்வந்து அரசியல் அமைப்பு சாசனத்தின் முன்னுரையை இணைத்து, உலக சாதனை படைத்துள்ளனர்.அதன்படி, 76 ஆண்டுகளில், இந்தியா உருவாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, பதிலை நாம் நிதானித்து யோசிப்போம். இப்போது கூட இதை உணர்ந்து அதில் கூறிய வண்ணம் வாழ தொடங்கினால் நாம் நிச்சயம் மேம்பட முடியும்.நல்லோர் வட்டத்தின் முயற்சியால், கடந்த, 11ல், உலக அமைதி தினத்தன்று, 11.11 நிமிடத்தில், தமிழகம் முழுவதும், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக, 98,000 மாணவர்கள், பல நிறுவனங்களை சேர்ந்த, 52,000 பொதுமக்கள் என, 1.50 லட்சம் பேர் இணைந்து, மூச்சு பயிற்சியுடன் கூடிய ஒரு நிமிட உலக அமைதியை காத்து, 'உலக சாதனை படைத்தனர்' என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி