உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 16 கிராமத்தில் 11,000 விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கல்: எம்.பி., ராஜேஸ்குமார்

16 கிராமத்தில் 11,000 விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கல்: எம்.பி., ராஜேஸ்குமார்

ராசிபுரம்: ''தி.மு.க., ஆட்சியில், 16 கிராமத்தில், 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது,'' -என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.ராசிபுரம் ஒன்றிய, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், செயலாளர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு, கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பேசினர்.தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:புதுப்பாளையம், பட்டணம், கட்டனாச்சம்பட்டி, கல்லாங்குளம், சானார்புதுார், பனங்காட்டூர், அத்திபலகானுார், களரம்பள்ளி, புதுார், மலையம்பட்டி, பட்டணம், முனியப்பம்பாளையம், கைலாசம்பாளையம், கருப்பனார் கோவில், வடுகம், மேலுார், கீழூர் ஆகிய, 16 கிராம பகுதி பொதுமக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான புதுப்பாளையம், 22 கி.வோ., பீடரை கிராமப்புற வகைப்பாட்டில் இருந்து, நகர்புற வகைப்பாடாக தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.அதை தொடர்ந்து, இப்பணி தொடங்கி வைத்துள்ளோம். இதன் மூலம், 11,000க்கு மேற்பட்ட மின் இணைப்பு பயன்பாட்டாளர்களும், 2,000க்கு மேற்பட்ட விவசாயிகளும் பயன் பெறுகின்றனர். இதனால், 25,000க்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்பு உள்ளவர்கள் பயன்பெறுகின்றனர். முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, காமராஜர், கருணாநிதிக்கு பின் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் காலையில் பள்ளிக்கு பசியோடு போகக்கூடாது என்ற நோக்கத்தோடு, முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட பொருளாளர் பாலச்சந்தர், சார்பு அணி அமைப்பாளர்கள் சண்முகம், சிவக்குமார், ராம்குமார், சத்யசீலன், சார்பு அணி தலைவர்கள் பூபதி, சிவக்குமார் உட்பட சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ