மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிஷா வாலிபர் சிக்கினார்
05-Oct-2025
சேந்தமங்கலம் : புதன்சந்தை மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பால், 3.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.சேந்தமங்கலம் அருகே, புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு நாமக்கல்லை சுற்றியுள்ள கொல்லிமலை, வேலகவுண்டம்பட்டி, புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதேபோல், கேரளா, ஆந்திராவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மாடுகளை வாங்கி செல்ல புதன்சந்தைக்கு வாரந்தோறும் வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிகளவிலான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால், கடந்த வாரம், 2.50 கோடி ரூபாய்க்கு விற்ற மாடுகள், இந்த வாரம் வரத்து அதிகரிப்பால், 3.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025