மேலும் செய்திகள்
கார் கதவில் நின்றபடி சென்ற முதல்வர் ஸ்டாலின் |
22-Oct-2024
நாமக்கல்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர், நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, விதிமுறை மீறி இயக்கப்பட்ட, 20 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட, 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன.அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாகனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து, 60,000 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
22-Oct-2024