உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட சிலம்ப போட்டி 500 வீரர்கள் பங்கேற்பு

மாவட்ட சிலம்ப போட்டி 500 வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த, மாவட்ட அளவிலான சிலம்ப போட்-டியில், 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.நாமக்கல் மாவட்ட சிலம்ப மூத்த ஆசான் நலச்சங்கம் சார்பில், 79வது சுதந்திர தினத்தையொட்டி, மாவட்ட அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டி, வேட்டாம்பாடியில் நடந்தது. அதில், நாமக்கல், ப.வேலுார், ராசிபுரம், திருச்செங்கோடு, மோகனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்-டிகள், 6 முதல், 17 வயது வரை, 11 பிரிவின் கீழ் தனித்திறமை போட்டியாக நடத்தப்பட்டது. வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், போட்டி-களை துவக்கி வைத்தும், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைக-ளுக்கு பரிசு, பதக்கம், கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்-கினார். ஏற்பாடுகளை, நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசா-னங்கள் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ