உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இளைஞர் குழு சார்பில் 51 யூனிட் ரத்தம் சேகரிப்பு

இளைஞர் குழு சார்பில் 51 யூனிட் ரத்தம் சேகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் அடுத்த கொண்டமநாயக்கன்பட்டியில், இளைஞர் குழு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இளைஞர் குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் போலீஸ் இன்ஸ்-பெக்டர் சங்கரபாண்டியன் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்து பேசியதாவது:'ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டுக்கு, அரசு ரத்த வங்கிக-ளுக்கு, தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, பல்வேறு துறையினர், ரத்ததானம் வழங்கி வருகின்றனர். தற்போது, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் முன் வந்து, முகாம் நடத்தி ரத்ததானம் பெறுகின்றனர். இது வரவேற்கத்தக்கது. மருத்துவ துறையில் எவ்-வளவு விலை கொடுத்தாலும், தானாக உருவாக்க முடியாத ஒரு விந்தை திரவம் தான் ரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.இளைஞர் குழு நிர்வாகிகள் பாலன், கமலசேகரன், சாம்ப-மூர்த்தி, சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில், 51 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ