உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 6 மாத சிசு சாக்கடையில் வீச்சு

6 மாத சிசு சாக்கடையில் வீச்சு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ஆறு மாத ஆண் சிசுவை சாக்கடையில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராசிபுரம், பட்டணம் சாலையில் உள்ள லட்சுமி தெரு அருகே, நேற்று காலை துாய்மை பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாக்கடையில் சிசு உடல் இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின், மேலே எடுத்து பார்த்தபோது, 6 மாத ஆண் சிசு என்பது தெரிந்தது. இதுகுறித்து, ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசுவின் சடலத்தை வீசிச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை