உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 9ல் குரூப்-4 தேர்வு: 174 மையங்களில் 51,433 பேர் தேர்வெழுத தகுதி

9ல் குரூப்-4 தேர்வு: 174 மையங்களில் 51,433 பேர் தேர்வெழுத தகுதி

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், வரும், 9ல் நடக்கும் குரூப்-4 தேர்வில், 174 மையங்களில், 51,433 தேர்வர்கள் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப்--4 தேர்வுக்கான அறிவிப்பை, கடந்த ஜன., 30ல் வெளியிட்டது. அதன்படி தட்டச்சர், சுருக்கெழுத்தர், வி.ஏ.ஓ., வரி தண்டலர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட, 6,244 பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடக்கிறது.இப்பதவிகளுக்கு இணையதளம் மூலம், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான தேர்வு வரும், 9ல் நடக்கிறது. கடந்த, 27 முதல், தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில், குரூப்-4 தேர்வு, 174 மையங்களில் நடக்கிறது. அதற்காக, 51,433 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, நாமக்கல் தாலுகாவில், 39 மையங்களில், 12,073 பேர், மோகனுார் தாலுகாவில், 8 மையங்களில், 2,229 பேர், சேந்தமங்கலம் தாலுகாவில், 17 மையங்களில், 4,562 பேர், ராசிபுரம் தாலுகாவில், 44 மையங்களில், 13,355 தேர்வர்கள் எழுதுகின்றனர்.மேலும், ப.வேலுார் தாலுகாவில், 21 மையங்களில், 5,872 பேர், திருச்செங்கோடு தாலுகாவில், 35 மையங்களில், 10,405 பேர், குமாரபாளையம் தாலுகாவில், 10 மையங்களில், 2,937 என, மொத்தம், 51,433 தேர்வர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை