உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

ராசிபுரம் : ராசிபுரம் அடுத்த ஆயாகோவில் பகுதியை சேர்ந்தவர் கோமதி, 58. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 20 அடி ஆழ கிணறு உள்ளது. கிணற்றில் தண்ணீர் இல்லை. நேற்று மாலை, இவ்வழியாக மேய்ச்சலுக்கு சென்ற மாடு கிணற்றில் தவறி விழுந்தது.நீண்ட நேரமாகியும் மாடு வராததால் சந்தேகமடைந்த கோமதி, கிணற்றை எட்டி பார்த்தார். அங்கு மாடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ