உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

வெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, நாச்சிப்பட்டியை சேர்ந்தவர் மணி, 58; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், நாச்சிப்பட்டி அருகே உள்ள கட்டியபாளையம் ஏரியில் மீன் பிடித்துள்ளார். அப்போது ஏரியின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கரை திரும்பாததால், உடன் சென்றவர்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் தீயணைப்பு துறையினர் ஏரியில் நீண்ட நேரம் தேடியும் மணியின் உடலை கைப்பற்ற முடியவில்லை. இதனால், நேற்று மீண்டும் ஏரியில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியின் ஆழமான பகுதியில் சேற்றில் மாட்டிக்கொண்ட மணியின் உடல் மீட்கப்பட்டது. வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை