மேலும் செய்திகள்
திருஞானசம்பந்தர் குருபூஜை விழா
13-Jun-2025
ப.வேலுார், ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் தேவாரம், திருவாசகம் ஓதலுடன், நேற்று காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு மஹா அபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில், நால்வர் பெருமக்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், அப்பூதியடிகள் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு மகேஸ்வர பூஜை உடன் அன்னம் பாலிப்பும் நடந்தது. ப.வேலுார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அடியார் பெருமக்களும், சிவனடியார்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
13-Jun-2025