உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தலைமறைவு குற்றவாளி அக்., 15ல் ஆஜராக உத்தரவு

தலைமறைவு குற்றவாளி அக்., 15ல் ஆஜராக உத்தரவு

நாமக்கல், சென்னை, தாம்பரம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் முத்து. இவர் மீது, நாமக்கல் நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், திருட்டு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு, நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.ஆனால், வழக்கு விசாரணைக்கு முத்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அதனால், நீதிமன்றம் முத்து என்பவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 'வரும், அக்., 15ல், காலை, 10:00 மணிக்குள், அவர் ஆஜராக வேண்டும். இல்லை என்றால், போலீசார் அவரை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ