மேலும் செய்திகள்
அண்ணன், தம்பிக்கு வலை
13-Jan-2025
எலச்சிபாளையம்: திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 49; இவர் கடந்த, 2009ல் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் இருந்த கணினி, 'டிவி', கேமரா உள்ளிட்டவற்றை திருடிச்சென்றார்.இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஜாமினில் வெளியே வந்த அவர், இதுவரை ஆஜராகாமல் ஏமாற்றி வந்தார். இதனால் அவரை, தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். இந்நிலையில், நேற்று, எலச்சிபாளையம் போலீசார் வேடச்சந்துாரில் சுற்றித்திரிந்த சிவக்குமாரை கைது செய்தனர்.
13-Jan-2025