உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அ.தி.மு.க., 54வது ஆண்டு விழா கொண்டாட்டம் நாமக்கல், சேந்தமங்கலத்தில் கட்சியினர் உற்சாகம்

அ.தி.மு.க., 54வது ஆண்டு விழா கொண்டாட்டம் நாமக்கல், சேந்தமங்கலத்தில் கட்சியினர் உற்சாகம்

நாமக்கல், அ.தி.மு.க.,வின், 54ம் ஆண்டு தொடக்க விழா, நாமக்கல், சேந்தமங்கலத்தில் கொண்டாடப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தொடங்கி வைத்த, அ.தி.மு.க., கட்சியின், 54-ம் ஆண்டு தொடக்க விழாவை, நேற்று அக்கட்சியினர் கொண்டாடினர். நாமக்கல் மாநகர அ.தி.மு.க., சார்பில், செலம்பகவுண்டர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாநகர செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து மாநகரில் உள்ள கட்சி அலுவலகம் முன் உள்ள கம்பத்தில், மாவட்ட பொருளாளர் காளியப்பன், கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். பொதுமக்கள், கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலர்கள் ராஜா, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.* சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் கொண்டப்பநாயக்கன்பட்டி, அக்கியம்பட்டி, பெரியகுளம் கிராம பஞ்., துாய்மை பணியாளர்கள், 50 பேருக்கு, வேட்டி, சேலை, இனிப்பு வழங்கப்பட்டது.சேந்தங்கலம் டவுன் பஞ்.,செயலாளர் ஆனந்தகுமார், காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., செயலாளர் ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஸ்ரீபாலன், நகர செயலாளர் ராஜேந்திரன், நகர, ஒன்றிய, டவுன் பஞ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.* பள்ளிப்பாளையம் நகரம், ஒன்றியம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து அ.தி.மு.க., சார்பில்., கட்சியின் 54 ஆண்டு துவக்க விழா, ஆவாரங்காடு பகுதியில் நகர செயலர் வெள்ளிங்கிரி தலைமையில் நடந்தது. பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய செயலர் செந்தில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர பேரவை செயலர் சுப்ரமணி, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லதுரை, மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை