வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 23ல் அன்னதான நிகழ்ச்சி
நாமக்கல், சேலம் ஜீவா பப்ளிக் பள்ளி சேர்மன் அங்கமுத்து வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், புதன் சந்தை அருகே நைனா மலையில், 12ம் நுாற்றாண்டை சேர்ந்த, 'ஆதிதிருப்பதி' என, பக்தர்களால் அழைக்கப்படும் புகழ்பெற்ற குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆவணி முதல் சனிக்கிழமையான, வரும் ஆக., 23ல், ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 1,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், திருச்செந்துார், பெரியபாளையம் பவானி அம்மன், ஸ்ரீரங்கம், திருச்செங்கோடு, சிவன்மலை, படை வீடு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கோவில்களில், மாதம் ஒருநாள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வரிசையில், கடந்த ஆடி முதல் சனிக்கிழமை, நைனாமலையில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் சனிக்கிழமை, அன்னதான நிகழ்ச்சி நடைபெறும். பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு, இறையருள் பெற வேண்டுகிறோம். ஏற்பாடுகளை, ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை செய்து வருகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.