வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
நாமகிரிப்பேட்டை: நெற்பயிர்களில் வேர் அழுகல், நாற்றழுகல், வாடல் நோயை கட்டுப்படுத்த, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா அறிவுரை வழங்கியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டிரைக்கோடெர்மா விரிடி, நோய்களை உண்டாக்கும் பூஞ்சாணங்-களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, வேருக்கு பாதுகாப்பு கவச-மாக விளங்குகிறது. இதை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்-தலாம். இது பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும்.பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளை (ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது. மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளி-தாக, விரைவாக மட்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்-சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதி-கரிக்கிறது. ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை, 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உலர்த்தி பின் நடவு செய்யலாம். டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு, 2 முதல், 3 கிலோவை மண்புழு உரம் அல்லது, 100 கிலோ நன்கு மக்கிய சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களுடன் கலந்து, 10 முதல்,- 15 நாட்கள் நிழலில் வைத்து பின் நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம். மேலும், டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோவை, 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியிலும் ஊற்றலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.