உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

நாமக்கல் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

நாமக்கல், நாமக்கல் வேளாண் வணிக துணை இயக்குனர் நாஷர் அறிவுறுத்தல்படி, நாமக்கல் உழவர் சந்தை சார்பில், எருமப்பட்டி வட்டாரம், அலங்காநத்தம் கோம்பையில், விவாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து, புதிதாக உழவர் அட்டை பெறுவதற்கான ஆவணங்கள், உழவர் சந்தையின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், பஸ் வழித்தட புகாருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.உதவி வேளாண் அலுவலர் கோகுல், மொத்த விலை, சில்லரை சேகரித்தல், உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்தல், நுகர்வோர்களின் புகார்கள் பற்றி எடுத்துரைத்தார். உதவி வேளாண் அலுவலர் ஸ்ரீதர், விடியற்காலை கடை ஒதுக்கீடு, டோக்கன் வழங்கி குலுக்கள் முறையில் தேர்வு செய்தல், காய்கறிகள் வரத்து குறித்து பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை குறித்து விளக்கினார். முகாமில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், வேளாண் துறையினர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை