மேலும் செய்திகள்
அரளி பூக்கள் கிலோ ரூ.400க்கு விற்பனை
15 minutes ago
காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் வருகை
16 minutes ago
நாமக்கல்லில் வரும் 11ல் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
16 minutes ago
சோமேஸ்வரர் கோவிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை
17 minutes ago
ராசிபுரம்: பா.ஜ., - அ.தி.மு.க., எதிர்ப்பையடுத்து, நகராட்சி சார்பில் நேற்று நடக்க இருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 5.75 கோடி ரூபாய் மதிப்பில், 20க்கும் மேற்பட்ட கடைகள், பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், கடைகளை டெண்டர் விட உள்ளதாக நகராட்சி அறிவித்திருந்தது. பணிகள் முடியாத நிலையில், கடைகளை டெண்டர் விடக்கூடாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கமிஷனர் நிவேதிதாவிடம் இது குறித்து மனு அளித்தனர். பா.ஜ., மத்திய நலத்திட்டப்பிரிவின் மாநில துணை அமைப்பாளர் லோகேந்திரன் உள்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நேரடியாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஏலம் நடக்க இருந்ததால் பொதுமக்கள், வணிகர்கள் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர். ஆனால், டெண்டர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: பணிகள் முழுவதும் முடிவதற்குள் ஏலம் விட்டால், குறைந்த வாடகைக்கு தான் செல்லும். இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.
15 minutes ago
16 minutes ago
16 minutes ago
17 minutes ago