அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் அன்பு-மலர் தலைமையிலான குழுவினர், ரத்த தானம் குறித்து பேசினர். மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ்கண்ணன், கல்லுாரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், உள்-தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் பாபு, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில், 61 மாணவ, மாணவியர் ரத்த தானம் செய்தனர். ஏற்பா-டுகளை யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் காசிலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.