மேலும் செய்திகள்
பி.ஏ.பி., வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு
05-Sep-2025
புன்செய்புளியம்பட்டி;கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ராம்குமார், 33; தனியார் சாப்ட்வேர் நிறுவன அதிகாரி. நண்பர்களுடன் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில், நேற்று முன்தினம் மாலை குளித்தார். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற ராம்குமார் மாயமானார். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடினர். இரவானதால் தேடுதல் பணி கைவிடப்பட்டு நேற்று காலை துவங்கியது. உக்கரம் அருகே குப்பன் துறை பகுதியில் ராம்குமார் சடலம் நேற்று காலை மிதந்தது.அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற பவானிசாகர் போலீசார் உடலை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் குளித்த பகுதியில் இருந்து, 17 கி.மீ., துாரதச்சதி அடித்து செல்லப்பட்ட நிலையில், 24 மணி நேரம் கழித்து உடல் மீட்கப்பட்டுள்ளது.
05-Sep-2025