உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அனுமதியின்றி பட்டாசு கடை நடத்திய 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பட்டாசு கடை நடத்திய 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பட்டாசு கடைநடத்திய 2 பேர் மீது வழக்குகுமாரபாளையம், நவ. 3-குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.,க்கள் தங்கவடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ.,க்கள் பழனிசாமி, ராம்குமார், மாதேஸ்வரன், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கலைமகள் வீதி, பள்ளிப்பாளையம் பிரிவு பகுதியில் பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்து வந்த முருகேசன், 51, நிர்மல்குமார், 51, ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை