மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
நாமக்கல் : 'மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, பழங்குடியினர் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பழங்குடியினர் நலம் கல்வி உதவித்தொகை, மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின், 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்டி., முனைவர் ஆராய்ச்சி படிப்பு மற்றும் உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்கள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள பழங்குடியினர் மாணவ, மாணவியர் https://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி, வரும், 31க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
05-Oct-2025
05-Oct-2025