உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசு திட்டத்தில் பயிற்சி பெண்களுக்கு சான்றிதழ் வழங்கல்

மத்திய அரசு திட்டத்தில் பயிற்சி பெண்களுக்கு சான்றிதழ் வழங்கல்

ராசிபுரம், மத்திய அரசு திட்டத்தின் கீழ், ராசிபுரத்தில் பயிற்சி முடித்த, 55 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.மத்திய அரசின், தேசிய வள அமைப்பான இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நாமக்கல் மாவட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ராசிபுரத்தில் ஒரு மாத கால இலவச தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் தையல் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அசெஞ்ஜர் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், 55 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் லேப்டாப் பேக், ஸ்கூல் பேக், சணல் பை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழாவில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா தலைமை வகித்தார். தமிழக அரசு பெண் தொழில் முனைவோர்களுக்காக, கலைஞர் கைவினை திட்டம் உள்பட பல்வேறு மானிய கடன் திட்டங்கள் குறித்து பேசினார். இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசெஞ்ஜர் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு மாநிலங்களில், 61,387 பெண்களுக்கு பயிற்சி அளித்து, 44,688 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ளதாகவும், இந்தாண்டு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 550 பெண்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்தார். தொடர்ந்து, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி