மேலும் செய்திகள்
அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்
27-Sep-2025
ப.வேலுார்,அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேற்று இரவு, பரமத்தி வேலுார் தொகுதிக்குட்பட்ட பாண்டமங்கலம் பகுதியில் மக்களிடையே பேசுகையில், ''154 கோடி ரூபாயில் ராஜவாய்க்கால் கால்வாயில் கான்கிரீட் போட்டு கரைகளை பலப்படுத்தினோம். எஞ்சிய பகுதி கான்கிரீட் கால்வாய் அமைக்காமல் இருப்பதாக சொன்னார்கள். அதுவும் முடித்துக்கொடுக்கப்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி, ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர், மாவட்ட துணை செயலாளர் இன்ப தமிழரசி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் வைரம் தமிழரசி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், கபிலர்மலை ஒன்றிய செயலாளர்கள் ஜே.பி.ரவி, சக்திவேல், பரமத்தி ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேல், ரவி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ஸ்ரீதேவி மோகன், நகர செயலாளர்கள் நாராயணன், பொன்னி வேலு, செல்வராஜ், ரவிந்தர், சுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
27-Sep-2025