உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் குப்பை சேகரிக்க நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என, 310 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று காலை, 6:30 மணிக்கு, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மாநகராட்சி வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சுந்தரமூர்த்தி, மாநில செயலாளர் தமிழ்-செல்வி, தமிழக அனைத்து துாய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநகரட்சி தலைவர் ஜெயந்தன் ஆகியோர் தலைமை வகித்-தனர். இதில், குறைந்தபட்ச ஊதியம், 878 ரூபாய் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., - பி.எப்., தொகை பங்களிப்பை முழுமை-யாக செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்-தினர். உடன்பாடு ஏற்படாததால், நேற்று இரவும் போராட்டம் தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை