தைப்பூசத்தில் பத்திரப்பதிவிற்குஅலைமோதிய மக்கள் கூட்டம்
ராசிபுரம்:'முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை, பொதுமக்கள் வசதிக்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்' என, பத்திரப்பதிவுத்துறை அறிவித்திருந்தது.ஆனால், கடந்த, 2ல் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்காமல் மூடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அதேபோல், தைப்பூசமான நேற்று, சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என, பத்திரப்பதிவுத்துறை அறிவித்திருந்தது.அதன்படி, நேற்று ராசிபுரம், நாமகிரிப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு பத்திரப்பதிவுக்கு விடுமுறை கட்டணமாக, 1,000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இருப்பினும் பத்திர பதிவுக்காக அதிகம் பேர் காத்திருந்தனர். நேற்று மாலை, 5:00 மணி வரை கூட்டம் குறையாமல் இருந்தது.