உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

குமாரபாளையம் கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், 'சைபர் கிரைம்' எனும் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் கலாவதி, 'சைபர் கிரைம்' எனும் இணைய குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியரிடையே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும், கணிதத்துறை தலைவருமான ரமேஷ்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் சரவணாதேவி, தமிழ் துறைத்தலைவர் ஞானதீபன், இயற்பியல் துறைத்தலைவர் அனுராதா, ஆங்கில துறைத்தலைவர் பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்