மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 347 மனுக்கள் அளிப்பு
05-Nov-2024
பள்ளிப்பாளையம், நவ. 19-சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குழாயில் இருந்து சிவப்பு, ரோஸ் நிறத்தில் தண்ணீர் வந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து புகாரால், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பள்ளிப்பாளையம் இ.ஆர்., தியேட்டர் பகுதி, ராமசாமி தெருவில் ஏராளமான வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விதிமுறை மீறி செயல்படும் சாய ஆலைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த, இரண்டு நாட்களாக குழாயை திறந்தால், சிவப்பு, ரோஸ் நிறத்தில் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை, எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்தளவுக்கு சாயக்கழிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.இதுகுறித்து, நேற்று அப்பகுதி மக்கள், பள்ளிப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தனர். அங்கு விரைந்த நகராட்சி அதிகாரிகள், தண்ணீரை வாலியில் பிடித்து ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் சிவப்பு நிறத்தில் வந்ததால், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, நிலத்தடி நீர் பாதிப்புக்கு எந்த சாய ஆலை காரணம் என, கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட மக்கள் மனக்குமுறலுடன் தெரிவித்தனர்.கலெக்டரிடம் மனு வழங்கிய மக்கள்பள்ளிப்பாளையம் பகுதி மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளிப்பாளையம் ஒன்றியம், புதுப்பாளையம் அக்ரஹாரம் பஞ்., பெரியகாடு, புளியங்காடு, பாலிக்காடு, வசந்த நகர் ஆகிய பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்படுகின்றன. இந்த சாயப்பட்டறைகளில், டன் கணக்கில் கெமிக்கல் பவுடர்களை பயன்படுத்துகின்றனர். இதனால், காற்று மாசுபட்டு, பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவதுடன், மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பால் சிரமப்படுகின்றனர்.மேலும், கழிவுநீரை சுத்திகரிக்காமல் கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற்றி காவிரி ஆற்றில் கலக்கின்றனர். அதன் மூலம் குடிநீர் மாசடைந்து, கேன்சர், கண் பாதிப்பு மற்றும் தோல் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக, கடந்த, அக்., 2ல், நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைந்து நடவடிக்கை எடுத்து, சாயப்பட்டறைகளை மூடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
05-Nov-2024