பூங்கா சாலையில் குழியால் விபத்தில் சிக்கும் அபாயம்
நாமக்கல் : நாமக்கல் பூங்கா சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் குழியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு மருத்துவ கல்லுாரி, புது பஸ் ஸ்டாண்ட், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் பூங்கா சாலை, கோட்டை சாலை வழியாக சென்று வருகின்றன. அது ஒருவழிச்சாலையாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பூங்கா சாலையில், அம்மா பூங்கா வாசலில் மெகா சைஸ் குழி ஏற்பட்டுள்ளது. அந்த குழி, இரண்டு அடிக்கும் மேல் உள் வாங்கி காணப்படுகிறது. அதனால் பூங்கா, உழவர் சந்தைக்கு வரும் மக்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.மேலும், இரவில் செல்லும் கனரக, இளகுரக, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன், குழியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.