உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 12 கிலோ செந்துாரத்தால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

12 கிலோ செந்துாரத்தால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

‍சேந்தமங்கலம்,சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டியில், 700 அடி உயர மலையில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சனிக்கி ழமை தோறும், ஸ்ரீதேவி, பூ‍தேவி, சமேத பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதேபோல், நேற்று காலை பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 12 வகை யான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரா தனை காட்டப்பட்டது.தொடர்ந்து, மலையடி வாரத்தில் உள்ள பக்த ஆஞ்ச நோயர் கோவிலில், 9 அடி ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 12 வகையான வாசனை திரவி யங்களால் அபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து, 12 கிலோ செந்துாரத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. நாமக்கல், சேந்த மங்கலம், ஆவல் நாய்க்கன்பட்டி, மரூர்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ